April 27, 2024

” தங்கமீன்கள் ” செல்லம்மாவா இது ..?? என்னங்க , இந்த பொண்ணு இப்படி வளர்ந்துட்டாங்க ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்க மீன்கள் . இந்த படத்தில் ராம்,ஷெல்லி கிஷோர் ,ரோகினி ,பத்மப்ரியா, அருள் தாஸ், பூ ராமு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பேபி சாதனா.  இந்தப் படத்தில் செல்லமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து,

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் பேபி  சாதனா . குறிப்பாக இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் வென்றார் பேபி  சாதனா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான ,

பேரன்பு என்ற படத்தில் மம்முட்டியின் மகளாக நடித்திருந்தார் சாதனா . குறிப்பாக இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சாதனா . இப்படி இருக்கும் நிலையில் சின்ன பெண்ணாக இருந்த சாதனா ,

இப்ப நெடுநெடுவென வளர்ந்து பெரிய பொண்ணாக மாறிவிட்டார்.  தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் தங்க மீன்கள் செல்லம்மாவா இது .? என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *