May 6, 2024

வெளியே வந்த “பிக்பாஸ்” கூல் சுரேஷ் ..!! முதல் ஆளாய் வந்து மாலை போட்ட சந்தானம் ..!! என்ன காரணம் தெரியுமா ..??

கூல் சுரேஷ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் கூல் சுரேஷ் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து காதல் அழிவதில்லை ,காக்க காக்க, திருடா திருடி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி ,தேவதையை கண்டேன் , தீபாவளி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகர் கூல்  சுரேஷ் .

இதை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகர் கூல் சுரேஷ்.  ஆரம்பத்தில் வலுவான போட்டியாராக இருந்து வந்த கூல் சுரேஷ் நாளாக நாளாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு,

முயற்சி செய்தார்.  இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேசன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார் நடிகர் கூல் சுரேஷ். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கூல் சுரேஷை நேரில் சந்தித்து மாலை போட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் சந்தானம்.

மேலும் சந்தானமும் , கூல் சுரேஷும் இணைந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ,முப்பொழுதும் உன் கற்பனைகள், இனிமே இப்படித்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *