May 5, 2024

சம்பள விஷயத்தில் நான் தான் நம்பர் ஒன் ..!! சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளிய விஜய் ..!! லியோ படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா ..??

வருகின்ற 19ஆம் தேதி விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் அன்றுதான் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வெளியாக உள்ளது . அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.  மேலும் இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன்,

மிஸ்கின் ,பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் போன்ற பல நடிகர் ,நடிகைகள் நடித்துள்ளனர் . எஸ் எஸ் லலித்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.  மேலும் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே,

400 கோடிக்கு மேல் பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாம் . கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு 150 கோடிக்கு மேல் லாபத்தை பெற்றுக் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக ,

விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் லியோ படத்திற்காக விஜய் 125 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் .  அப்படி பார்த்தால் தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் தான் இருந்து வருகிறார் . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

அடுத்த நடிக்க உள்ள படத்திற்கு 90 கோடி தான் சம்பளம் வாங்கி இருக்கிறாராம் . இதனால் சம்பள விஷயத்தில் சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் நடிகர் விஜய் . அடுத்த படத்திற்கு இதை விட அதிகமாக வாங்குவார் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *