May 15, 2024

ஊருக்கே உதவி செய்யும் பாலா ..!! இதற்கு விதை போட்டது இந்த நடிகரா ..?? நன்றியை மறக்காமல் வெளியில் சொல்லிய பாலா ..!!

கே பி ஒய் பாலா ஓர் பிரபலமான விஜய் டிவி பிரபலம் மற்றும் காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் பாலா . குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய டைமிங் காமெடியின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் பாலா.  இதன் பிறகு இவருக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது.

அந்த வகையில் தமிழில் வெளிவந்த பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்த அசத்தியிருக்கிறார் நடிகர் பாலா.  இந்நிலையில் அண்மை காலமாக எதையும் யோசிக்காமல் இவர் செய்யும் உதவிகள் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது .அப்படி மலைவாழ் மக்களுக்காக ,

மூன்று ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது , சென்னை மக்களுக்காக 5 லட்சம் கொடுத்து உதவியது என்று தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் பாலா . ஆனால் இப்படி ஊருக்கே உதவி வரும் பாலாவுக்கு ஆரம்ப காலகட்டத்தில் உதவி இருக்கிறார் ஒரு நடிகர் .

அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவி பிரபலமும் , நடிகருமான தாடி பாலாஜி தான்.  அந்த வகையில் பாலா விஜய் டிவிக்கு வந்த பொழுதில் அவரிடம் சரியான உடைகள் எதுவும் இருக்காதாம்.  இதை கேள்விப்பட்ட தாடி பாலாஜி பாலாவுக்காக புதிய துணிகளை வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் ,

புதிய ஷூஸ்க்களையும் வாங்கி கொடுத்திருக்கிறார் . அப்போதிலிருந்து தான் நாமும் வளர்ந்து பிறகு பல பேருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பாலாவுக்கு வந்ததாம் . இதைப் பார்த்து ரசிகர்கள் தாடி பாலாஜிக்கு இவ்வளவு நல்ல மனசா .? என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *