May 7, 2024

மீண்டும் 16 வயதுக்கே சென்ற சிவகார்த்திகேயன் ..!! என்னங்க இவரு இப்படி மாறிட்டாரு ..?? லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் . விஜய் தொலைக்காட்சியில் ஒரு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்து மெரினா என்ற படத்தின்  மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . இதன் பிறகு நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் ,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன் . இன்னும் சொல்லப் போனால் சிவகார்த்திகேயனை நம்ம வீட்டு பிள்ளை போலவே பலரும் பார்த்து வருகின்றனர் . ஆனால் சமீபத்தில் டி. இமான் கிளப்பிய சர்ச்சையால் சிவகார்த்திகேயனின் பெயர் ,

கொஞ்சம் கொஞ்சமாக டேமேஜ் ஆனது . இருந்தாலும் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தானுண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  அந்த வகையில் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும்,

புதிய படத்தில் பிஸியாக  நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்திற்காக 16 வயது பையன் போல மாறி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னையா இவரு இப்படி மாறிட்டாரு என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர் . இதோ அந்த  புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *