April 27, 2024

சொந்த மகனையே நரபலி கொடுக்க பார்த்த ” லியோ ” பட வில்லனின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ.  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வில்லனாக அறிமுகமானவர் தான் நடிகர் சஞ்சய் தத்.  இந்த படத்தில் தன்னுடைய சொந்த மகனையே நரபலி கொடுக்கும் அளவிற்கு வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார் நடிகர் சஞ்சய் தத் . பிரபல ஹிந்தி நடிகரான சஞ்சய் தத் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான,

ராக்கி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ஹிந்தி சினிமா உலகில் கொடி கட்டி பறந்து வந்தார் . இப்படி ஹிந்தி மொழி சினிமாவில் கலக்கி கொண்டு வந்த சஞ்சய்தத் மற்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார் .

அப்படி கடந்த வருடம் வெளியான கேஜிஎப் 2 படத்தில் ஆதிரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டி இருந்தார் நடிகர் சஞ்சய் தத் . இதையடுத்து தற்போது தமிழ் ,தெலுங்கு , பஞ்சாபி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் .

இதனிடையே மூன்று திருமணம் செய்து கொண்ட சஞ்சய் தத்துக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத லியோ பட வில்லனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *