April 29, 2024

விஜய் என்ன சிறந்த நடிகரா..?? அப்பறம் எதுக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் ..?? விஜய்யை மோசமாக விமர்சித்த விஜய் பட நடிகர் ..!!

விஜய் ஒரு பிரபலமான தமிழ் திரைப்படம் முன்னணி நடிகர் ஆவார்.  லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.  இப்படி இருக்கும் நிலையில் விஜய் என்ன சிறந்த நடிகரா,  அவருக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் என்று விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர் .

அவர் வேறு யாருமில்லை மலையாள நடிகரான சைன் தாம் சாக்கோ தான்.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய கடந்த வருடம் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்,

நடிகர் சைன் தாம் சாக்கோ . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார் நடிகர் சைன் தாம் சாக்கோ. மேலும்  இவர் தமிழ் ,

தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சைன் தாம் சாக்கோ கூறியதாவது , விஜய் என்ன மம்முட்டி , மோகன் லாலைவிட சிறந்த நடிகரா .?

அப்புறம் எதுக்கு இவருக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம்.?  சரக்கை விட பைபிள் குறைந்த விலைக்கு விற்பதால் , பைபிள் மதிப்பெற்றது கிடையாது என்று விஜய்யை மோசமாக விமர்சித்து இருந்தார் நடிகர் சைன் தாம் சாக்கோ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *