April 29, 2024

இரண்டு திருமணம் செய்துக்கொண்ட நடிகர் விஷ்ணு விஷால் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? வெளிவந்த புகைப்படங்கள் உள்ளே ..!!

விஷ்ணு விஷால் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விஷ்ணு விஷால்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்து விட்டார் நடிகர் விஷ்ணு விஷால்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,

பலே பாண்டியா, துரோகி ,குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இதன் பிறகு இவர் நடித்திருந்த முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை,

ஏற்படுத்தியது . இதனிடையே கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்  நடிகர் விஷ்ணு விஷால் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.  இப்படி இருந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மனைவியை பிரிந்த ,

விஷ்ணு விஷால் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு பேட்மிட்டன் பிளேயரான ஜுவாலா குட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் விஷ்ணு விஷாலின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *