April 29, 2024

நெல்சன் தப்பிச்சிட்டாரு ,லோகேஷ் மாட்டிக்கிட்டாரு ..!! ஸ்ட்ரிட்டான கண்டிஷன் போட்ட சூப்பர் ஸ்டார்..!! மாட்டிக்கொண்டு முழிக்கும் லோகேஷ் கனகராஜ்..!!

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பினாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களே பெற்று வருகிறது. இதுவும் இந்த படத்திற்கு ஒரு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கியிருந்த நெல்சன் ,

மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளானார் . அப்படி இருந்தும் கூட சூப்பர் ஸ்டார் இவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார் .பின்னர் அந்த நம்பிக்கையை ஜெயிலர் படத்தில் காப்பாற்றி இருந்தார் இயக்குனர் நெல்சன். தற்போது இவரைப் போலவே இடியாப்ப சிக்கலில் மாட்டியிருக்கிறார்,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  காரணம் லியோ படத்தில் எல் சி யு கான்செப்ட் தேவையே இல்லை . அது மட்டுமல்லாமல் மிஸ்கின் ,மன்சூர் அலிகான்,கௌதம் வாசுதேவ் மேனன், வையாபுரி போன்ற கதாபாத்திரங்கள் ஏமாற்றத்தையே கொடுத்தது .

இதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்க இருக்கிறார் . இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ்க்கு ஸ்ட்ரிட்டான கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம் . அது என்னவென்றால் தன்னுடைய படத்தில் எல் சி யு இருக்கக் கூடாது,

என்று கூறிவிட்டாராம் . இதனால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து எழுதி வருகிறாராம் லோகேஷ் கனகராஜ் . இதைப் பார்த்த ரசிகர்கள் நெல்சன் கம் பேக் கொடுத்துட்டாரு லோகேஷ் கொடுப்பாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *