April 29, 2024

இயக்குனர் அணுகினால் மறுக்க கூடாது ..!! வளர்ந்து வரும் நடிகைகளுக்கு ..!! அறிவுரை கூறிய ரம்யா கிருஷ்ணன் ..!!

ரம்யா கிருஷ்ணன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . தமிழில் வெளியான வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா கிருஷ்ணன் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறினார் . குறிப்பாக 50 வயதை கடந்தும் கூட தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக்கொண்டு வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் கூறியதாவது , ஒரு இயக்குனர் நடிகைகளிடம் கதை கூறினால்,  அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று அந்த நடிகை சொல்வது அழகு கிடையாது . ஒரு இயக்குனர் உங்களை அணுகி வருகிறார் ,

என்றால் அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் தான்.  ஆனால் அதே நேரத்தில் அவருடைய நோக்கம் தவறாக இருந்தால் நடிகைகள் மறுக்கலாம் . ஆனால் அதைத்தாண்டி அது சரியில்லை,  இது சரியில்லை என்று குறை சொல்லி மறுக்கக்கூடாது .

மேலும் பெரும்பாலான நடிகைகள் இப்படி நடிக்க மாட்டேன் என்று அவர்களுடைய எதிர்காலத்திற்கு அவர்களே தடையாக இருந்தார்கள் . அப்படி கூறிவிட்டால் அந்த இயக்குனரும் அடுத்த படத்தில் உங்களை யோசித்து கூட பார்க்க மாட்டார் என்று கூறியிருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

மேலும் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த படையப்பா, பஞ்சதந்திரம், பாகுபலி ,சூப்பர் டீலக்ஸ் போன்ற பல திரைப்படங்களின் தாக்கம் இன்றளவும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *