May 6, 2024

சூப்பர் ஸ்டார் படம்னா சும்மாவா..?? ரீ ரிலீஸில் மாஸ் காட்டும் முத்து ..!! அடேங்கப்பா , ஐந்தே நாளில் இவ்வளவு வசூலா ..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 1995ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முத்து.  மலையாள படமான தென்மாவின் கொம்பத்து  என்ற படத்தின் ரீமேக்கான முத்து படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா ,சரத் பாபு ,ராதாரவி, செந்தில், வடிவேலு, ஜெயபாரதி, சுபஸ்ரீ ,பொன்னம்பலம் ,விசித்ரா ,ரகுவரன்,

காந்திமதி போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.  இந்தப் படத்தை இயக்குனர் கே பாலச்சந்தர் தயாரித்திருந்தார் . இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் .  இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது .

இன்னும் சொல்லப் போனால் அந்த காலகட்டத்தில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் முத்து திரைப்படம் பெற்றது.  அதோடு இந்த திரைப்படம் ஜப்பானில் வெளியிட்டு இருந்தார்கள் . இதனால் ஜப்பானில் சூப்பர் ஸ்டாருக்கு ரசிகர்கள் உருவாகினார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்திருந்தார்கள்.  அந்த வகையில் 4k டெக்னாலஜியில்  இந்தப் படத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் செய்திருந்தார்கள்.  இந்தத் திரைப்படத்தை ரசிகர்கள்,

ஆவலோடு சென்று பார்த்தனர் . அப்படி இந்த திரைப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 23 .5 லட்சம் வசூல் செய்துள்ளதாம் . இதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார்னா சும்மாவா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *