May 6, 2024

உதவின்னு கேட்டா ஓடோடி வரும் ” கே பி ஒய் ” பாலாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? இப்படியொரு பிள்ளைய பெற்றதற்கு இவங்க தான் பெருமை படணும் ..!!

பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் இருந்து பல தரமான கலைஞர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அப்படி விஜய் டிவியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அற்புதமான மனிதர் தான் கே பி ஒய் பாலா . விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான பாலா ,

தொடர்ந்து குக் வித்  கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, காமெடி  ராஜா கலக்கல் ராணி, கதாநாயகி போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார் பாலா . இப்படி சின்னத்திரையில் கலக்கி கொண்டு வந்த பாலா வெள்ளித்திரையில் வெளியான,

ஜூங்கா, தும்பா ,புலிக்குத்தி பாண்டி ,பிரண்ட்ஷிப் ,நாய் சேகர் ,கணம், ரன் பேபி ரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . என்னதான் இவர் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் இவர் செய்யும் உதவிகள் அனைத்தும் ரசிகர்களை ஆச்சிரியப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் கொடுத்து உதவி இருந்தார் பாலா . இப்படி ஊருக்கே அள்ளிக் கொடுத்த பாலாவின் குடும்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *