April 27, 2024

கவுண் டம ணி மீ ண்டும் வரா ர் ..!! எட்டு த்திக் கும் சி ரிப்பு தா னே ..!! 84 வயதி லும் ஹீரோ வாக என்ட் ரி கொ டுக் கும் நடிகர் ..!! வெளி யான புகை ப்படத் தால் கொண் டாட்ட த்தில் ரசி கர் க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சில காமெடி நடிகர்கள் ஆட்சி செய்து வருவார்கள் . அப்படி 80 , 90 களில் தமிழ் சினிமாவையே தன்னுடைய காமெடியால்  வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் கவுண்டமணி . அதுவும் ஒரு கட்டத்தில் கவுண்டமணி – செந்தில் கூட்டணி சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி, கமல் ,விஜயகாந்த் ,

சத்யராஜ், சரத்குமார் ,பிரபு ,விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார் நடிகர்  கவுண்டமணி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி இருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 84 வது வயதில் மீண்டும் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார் நடிகர் கவுண்டமணி.அந்த வகையில் ,

இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி வரும் “ஒத்த ஓட்டு முத்தையா ” என்ற படத்தில் நடிக்கிறாராம் . குறிப்பாக ரஜினி , கமலே வயதாகி விட்டதால் ஹீரோ சப்ஜெக்ட் கதையிலிருந்து விலகி வரும் நிலையில் கவுண்டமணி 84 வயதிலும் ஹீரோவாக களம் இறங்கியுள்ளது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *