May 3, 2024

பிஸியாக இருக்கும் கார்த்தி , தமன்னா ..!! பையா 2 வில் ஹீரோ, ஹீரோயினான பிரபலங்களின் வாரிசு ..!! வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் ..!!

தமிழ் சினிமாவில் கடத்த 2010 இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பையா.  இந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து தமன்னா , மிலிந்த் சோமன், ஜெகன், சோனியா தீப்தி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது .

குறிப்பாக இந்த திரைப்படம் கார்த்திக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.  இந்தப் படத்தின் போது தான் கார்த்திக்கும் தமன்னாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி 13 வருடங்கள்,

ஆன நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பகுத்தை தொடங்க உள்ளாராம் இயக்குனர் லிங்குசாமி . ஆனால் அதில் ஹீரோவாக நடிக்கப்போவது கார்த்தி கிடையாதாம் . அந்த வகையில் தற்போது கார்த்தி பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் .

இதனால் பையா 2 படத்தில் முரளியின் இளைய மகனும் , நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிக்க உள்ளாராம் . இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *