May 5, 2024

ஜெயிலரை வேட்டையாடிய விலங்கு ..!! விஜய்யால் செய்ய முடியாததை செய்துகாட்டிய பிரபல நடிகர் ..!! 10 நாட்களில் 650 கோடி வசூலா ..??

தமிழ் சினிமா உலகில் கடந்த ஆகஸ்ட் மாதம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர் . இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து விநாயகன், ரம்யா கிருஷ்ணன் ,வசந்த் ரவி, தமன்னா, சுனில் ,யோகி பாபு ,மிர்னா மேனன் ,மோகன்லால் ,சிவராஜ்குமார் , ஜாக்கிசரப் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம்,

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 650 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதனால் இதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கண்டிப்பாக இந்த படத்தின் வசூலை முறியடித்து விடும் என்று பலரும் கூறி வந்தார்கள் .

ஆனால் லியோ திரைப்படம் 600 கோடி மட்டுமே வசூல் செய்தது.  இப்படி இருக்கும் நிலையில் விஜய்யால் செய்ய முடியாததை பிரபல நடிகர் ஒருவர் செய்திருக்கிறார் . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் ரன்பீர் கபூர் தான்.  சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ,

திரைப்படம் தான் அனிமல்.  இந்த படத்தில் ரன்பீர் கபருடன் இணைந்து அணில் கபூர் ,ராஷ்மிகா மந்தனா ,பப்லு பிரித்விராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் பத்து நாட்களில்,

650 கோடிக்கு மேல் வசூல் செய்தது மட்டுமல்லாமல் ஜெயிலர் படத்தின் வசூலையும் முறியடித்து இருக்கிறது அனிமல் திரைப்படம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *