April 26, 2024

மீண்டும் மீண்டுமா ..?? நாலாவது முறையாக அஜித்துடன் இணையும் பிரபல இயக்குனர் ..!! கையெடுத்து கும்பிடும் ரசிகர்கள் ..!!

அஜித் ஓர் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். தற்போது  இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிசியாக நடித்துக்கொண்டு வருகிறார் . மேலும் அஜித்திடம் ஒரு சென்டிமென்ட் ஒன்று இருக்கிறது . அது என்னவென்றால் அவருக்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் தொடர்ந்து அந்த இயக்குனருடன் பணியாற்றுவதற்கு ஆசைப்படுவாராம்.

அப்படி தனக்கு பிடித்த இயக்குனர்களிடம் பலமுறை பணி புரிந்து இருக்கிறார் அஜித் . இப்படி இருக்கும் நிலையில் நாலாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணைய உள்ளாராம் அஜித் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் எச் வினோத் தான் . சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம்,

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இயக்குனர் எச் வினோத்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் . இந்த படத்தை பார்த்து வியந்து போன அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை,

இயக்கும் வாய்ப்பை எச் வினோத்துக்கு கொடுத்திருந்தார் .பின்னர் மீண்டும் எச் வினோத் இயக்கிய வலிமை, துணிவு போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகர் அஜித் .  இப்படி இருக்கும் நிலையில் எச் வினோத் கமல்ஹாசன் படத்தில் கமிட்டாகி இருந்தார்.ஆனால் தற்போது,

கமல்ஹாசன் பிசியாக இருப்பதால் இவரை கண்டுக்கொள்ளவில்லையாம் . இதனால் மீண்டும் அஜித்துடன் படம் பண்ணுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம் இயக்குனர் எச் . வினோத் இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டுமா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *