May 7, 2024

வெறும் 10 நிமிஷ காட்சிக்கு 6 கோடியா..?? ஷங்கரையே மிஞ்சிய வெங்கட் பிரபு ..!! அப்படி தளபதி 68 ல என்ன இருக்கு ..??

தற்போது லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.  இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா ,மைக் மோகன், சினேகா, லைலா ,அஜ்மல், மீனாட்சி மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்கள் போன்ற பல பிரபலங்கள் நடித்துக் கொண்டு வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மகன் என்று ,

இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இப்படி இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் டி ஏஜிங் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் விஜய் இளமையாக காட்ட உள்ளார்களாம் . இந்த தொழில்நுட்பத்தை கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் ,

இயக்குனர் ஷங்கர் பயன்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் தளபதி 68 படத்தில் கிட்டத்தட்ட பத்து நிமிடம் மட்டுமே வரப்போகும் அந்த காட்சிக்காக ஆறு கோடி செலவு செய்துள்ளாராம் இயக்குனர் வெங்கட் பிரபு.  இதை பார்த்த ரசிகர்கள் ,

வெறும் பத்து நிமிஷ காட்சிக்கு ஆறு கோடியா .? பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரையே  வெங்கட் பிரபு மிஞ்சி விடுவார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *