April 29, 2024

பிக்பாஸுக்கு வரும் 90 ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர்..!! உள்ளே இழுத்துவிட்ட உலகநாயகன் ..!! என்ன நடக்கப்போகுதோ தெரியல ..??

தற்போது பிக் பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க இருக்கிறது . ஏற்கனவே இந்த சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் இந்த சீசனில் 90 ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர் ஒருவரும் கலந்து கொள்ள உள்ளாராம்.  அவர் வேறு யாரும் இல்லை நடிகர் ஷாம் தான் . கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான 12 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் ஷாம் .

இப்படி வெளியான முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் நடிகர் ஷாம் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே , ஏ பி சி டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்,

நடிகர் ஷாம் .  குறிப்பாக 90ஸ் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய வந்தனர்.  பின்னர் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது . இதனால் இரண்டாம் கதாநாயகன் ஆகவும் , துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் ஷாம் .

அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணனாகவும் நடித்திருந்தார் நடிகர் ஷாம்  . இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறாராம் நடிகர் ஷாம்  . இப்படி இருக்கும் நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக,

கலந்து கொள்ள உள்ளாராம் நடிகர் ஷாம் . ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *