May 3, 2024

என் மா மான ரை நா ன் விட் டு கொடு க்க மா ட் டேன் ..!! ஜெ யிலர் படத்தி ற்கா க தனு ஷ் செ ய்த சம்ப வம்..!! முத லி ல் ரசி கன் அப்ப றம் தா ன் மரும க ன் ..!!

தனுஷ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு ,ஹிந்தி, ஆங்கிலம் என்று பல மொழி படங்களிலும் கலங்கி கொண்டு வருகிறார் . இதனிடையே கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ் .

திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  திருமணமாகி 18 வருடங்கள் தனுஷும்,  ஐஸ்வர்யாவும் நன்றாக தான் வாழ்ந்து வந்தனர் . ஆனால் கடந்த வருடம் அவரை பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தார் நடிகர் தனுஷ் . இதனால் ரஜினிகாந்த் அவர் மீது உச்சக்கட்ட கோபத்தில்,

இருப்பதாக அப்போது கூறப்பட்டது.  இப்படி இருக்கும் நிலையில் ஒரு வருடம் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் ஜெயிலர் . இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து மோகன்லால் ,

சிவராஜ்குமார் , ஜாக்கி ஸ்ரொப் , விநாயகன், சுனில் ,ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது.  இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் தனுஷ் ,

ஜெயிலர் படம் குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார் . அதில் “இது ஜெயிலர் வாரம்” என்று மகிழ்ச்சியுடன் இருப்பது போல ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் விவாகரத்தானாலும் மாமனாரை விட்டுக் கொடுக்க மாட்டார் போல,  இவரே அவருக்கு பெரிய ரசிகர் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *