April 29, 2024

கைவிட்ட சூப்பர் ஸ்டார் ..!! அக்கட தேசத்து ஹீரோவுக்கு கொக்கி போட்ட ” டான் ” பட இயக்குனர் ..!! அப்ப படம் சூப்பர் ஹிட் தான் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த வருடம் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டான் . இந்த படத்தில் சிவகார்த்திகேய னுடன்  இணைந்து எஸ் ஜே சூர்யா ,சமுத்திரக்கனி ,பிரியங்கா மோகன் ,சூரி, முனீஸ்காந்த் ,காளி வெங்கட் ,பால சரவணன் ,ஆர் ஜே விஜய் ,சிங்கம் புலி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் ,

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . பின்னர் இந்தப் படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அவர்கள் பாராட்டியது மட்டுமல்லாமல் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும்,

வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார் . குறிப்பாக இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் சிபிச் சக்கரவர்த்தி இணையுள்ளதால் இந்தக் கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.  ஆனால் யாரு கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை சூப்பர் ஸ்டார் இவரை ,

கைவிட்டதாக கூறப்படுகிறது.  அதற்கும் ஒரு சில காரணங்கள் உள்ளதாகவும் தகவல் வெளியானது . இந்நிலையில் சூப்பர் ஸ்டார் கைவிட்டதால் தற்போது அக்கட தேசத்து ஹீரோவுக்கு கொக்கி போட்டு இருக்கிறார் சிபிச் சக்கரவர்த்தி.  அவர் வேறு யாரும் இல்லை நடிகர் நானி தான் .

அந்த வகையில் நானியின் அடுத்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி தான் இயக்க உள்ளாராம் . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *