April 28, 2024

இந்தியனுக்கு சாவே கிடையாது டா ..!! 27 வருடங்கள் கழித்து முகத்தை காட்டிய ” இந்தியன் தாத்தா ” ..!! 90 ரசிகர்களை குஷியாக்கிய வீடியோ இதோ ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன் . அந்த நேரத்தில் அதிக பொருட்ச அளவில் உருவான இந்த திரைப்படம் அதிக வசூலையும் குவித்து சாதனை படைத்தது. பின்னர் பல வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் இயக்குனர் ஷங்கர் .

அந்த வகையில் இந்த படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், எஸ் ஜே சூர்யா ,ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர் ,காளிதாஸ் ஜெயராம், நெடுமுடி வேணு ,விவேக் ,சமுத்திரகனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ்  என்று ஒரு முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர் .

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் . பல வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது . இப்படி இருக்கும் நிலையில் இன்று இந்த படத்தின் முதல் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . அந்த வகையில் கிட்டத்தட்ட 27 வருடங்கள் கழித்து ,

இந்தியனுக்கு சாவே கிடையாது என்று சொல்லி தன்னுடைய முகத்தை காட்டியுள்ளார் இந்தியன் தாத்தா . இந்த ஒரு காட்சி ஒட்டுமொத்த 90 ஸ் ரசிகர்களையும் குஷியாக்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . இருந்தாலும் இந்த படத்திற்கு அனிருத்தை விட ,

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *