May 2, 2024

தமிழ்நாட்டின் நீலாம்பரி , இந்தியாவின் ராஜமாதா ..!! ரம்யா கிருஷ்ணனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

ரம்யா கிருஷ்ணன் ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார்.  கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்ற படத்தின்  மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து படிக்காதவன் ,முதல் வசந்தம் ,ஜல்லிக்கட்டு, கதாநாயகன், கேப்டன் பிரபாகரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  இருந்தாலும் இவருக்கு படையப்பா திரைப்படம் ,

மிகப்பெரிய வரவேற்பு பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இந்த படத்தில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம்,

கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதோடு பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார் நடிகை ரம்யா கிருஷ்ணன் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும்போதே கடந்த 2௦௦3ஆம் ஆண்டு ,

கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்யா கிருஷ்ணன் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை ரம்யா கிருஷ்ணனின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *