April 29, 2024

இயக்குனரா பார்த்திட்டீங்க ..!! இனி நடிகரா பார்ப்பீங்க ..!! நடிகன் அவதாரம் எடுத்த வெற்றிமாறன் ..!! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க ..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன் . ஆரம்பத்தில் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வந்த இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் .  இப்படி வெளியான,

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் இயக்குனர்  வெற்றி மாறன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆடுகளம் ,விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் வெற்றிமாறன்  .

குறிப்பாக இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை ஒரு தோல்வி படம் கூட கொடுத்தது கிடையாது . இதனாலேயே இவருடைய படத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இப்படி இயக்குனராக கலக்கிக்கொண்டு வந்த,

இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக நடிகராகவும் அவதாரம் எடுக்க உள்ளாராம்.  அந்த வகையில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் உருவாக உள்ள திரைப்படம் தான் ட்ரெயின் . இந்த படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில்,

நடிக்க உள்ளாராம் இயக்குனர் வெற்றிமாறன். இப்படி முதல் முதலாக இயக்குனர் வெற்றிமாறன் திரையில் தோன்ற உள்ளதால் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *