April 30, 2024

500 கோ டியும் இ ல்ல , 400 கோ டி யும் இ ல்ல ..!! ஜெயி லர் படத் தின் உண் மை யான வசூ ல் இ து தா ன் ..!! அதிகா ரபூர் வமாக அறி வி த்த ச ன் பிக் ச ர்ஸ் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டாரின் படங்கள் தான் வசூலில் முதல் இடத்தில் இருக்கும்.  ஆனால் அண்மை காலமாக அவருடைய நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  இதை அடுத்து வெளியான ஜெயிலர் திரைப்படம் மீண்டும் சூப்பர் ஸ்டாரை உச்சத்திற்கே  கொண்டு சென்றுள்ளது.  அந்த வகையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ,

உருவான இந்த திரைப்படம்  சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.  குறிப்பாக தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும் மாஸ் காட்டி வருகிறது ஜெயிலர் திரைப்படம் . இந்நிலையில் இந்த திரைப்படம் 400 கோடி வசூலித்து விட்டது , 500 கோடி வசூலுக்கு விட்டது என்று இணையத்தில் தகவல்கள் வெளியானது .

ஆனால் ஜெயிலர் படத்தின் உண்மையான வசூல் இது தானாம் .அந்த வகையில் ஜெயிலர் திரைப்படம் முதல் வாரத்தில் 375. 40 கோடி வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்  அறிவித்துள்ளது . இன்னும் வரும் நாட்களில் ஜெயிலர் படத்தில் வசூல் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *