May 2, 2024

போன வாரம் மன்சூர் அலிகான்..!! இந்த வாரம் இவரா ..?? அடுத்த பஞ்சாயத்தில் சிக்கிய திரிஷா ..!! மானம் ,ரோசம் எல்லாம் இப்ப எங்க போச்சு ..??

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா . பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார் திரிஷா . இப்படி இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி மிகவும் கொச்சையாக பேசியிருந்தார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதற்கு எதிராக நடிகர் திரிஷா,

கண்டனமும் தெரிவித்து இருந்தார் . இதனால் பல தமிழ் பிரபலங்கள் திரிஷாவுக்கு மட்டுமே ஆதரவு கொடுத்து வந்தனர்.  இதன் பிறகு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்ட பிறகு இந்த பிரச்சனை அப்படியே ஓய்ந்தது .இந்நிலையில் அடுத்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் நடிகை திரிஷா.

அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அனிமல்.   இப்படி வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.  இந்நிலையில் இந்த படத்தை பார்த்த திரிஷா,

” cult “என்று தன்னுடைய விமர்சனத்தை கொடுத்திருந்தார் . இதுதான் தற்போது அவருக்கு எதிராக திரும்பி உள்ளது.  காரணம் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆண்களின் வன்முறைகளை மையமாகவே கொண்டு சித்தரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் பெண்களே,

முகம் சுளிக்கும் வகையில் ஒரு சில காட்சிகளும் இருக்கிறது . இப்படியொரு மோசமான படத்திற்கு திரிஷா நல்ல விமர்சனத்தை கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனால் அந்த பதிவை போட்ட உடனே டெலிட் செய்து விட்டார் நடிகை திரிஷா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *