May 5, 2024

வெற்றி வாகை சூடிய உதயநிதி ஸ்டாலின் பட நடிகை ..!! நடிப்பை தாண்டி விளையாட்டிலும் கலக்குறாரே ..!! வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் ..!!

நிவேதா பெத்துராஜ் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார்.  ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த நிவேதா பெத்துராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின்,

நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் ,விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு புடிச்சவன் ,விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத் தமிழன், பிரபுதேவா நடிப்பில் வெளியான பொன் மாணிக்கவேல் போன்ற,

பல திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என்று மாறி மாறி நடித்துக்கொண்டு வருகிறார் .இப்படி இருக்கும் நிலையில் நடிகை நிவேதா நடிப்பை தாண்டி விளையாட்டிலும் ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு வருகிறார்.  அந்த வகையில் பேட்மிட்டன்,

விளையாட்டில் வெற்றிவாகை சூடி கோப்பையை வென்றிருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ் . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *