April 30, 2024

இனிமே நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க..!! அடுத்த படத்திற்காக வெறித்தனமாக மாறிய சிம்பு..!! ட்ரெண்டாகும் புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிம்பு . இயக்குனரும் , நடிகருமான டி ராஜேந்திரனின் மூத்த மகனான சிம்பு ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்தார். பின்னர் அவருடைய அப்பா இயக்கத்தில் வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே,

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் நடிகராக மாறினார் சிம்பு . ஆனால் இடையில் தேவையில்லாமல் சில சர்ச்சைகளில் சிக்கி பெயரைக்கெடுத்துக் கொண்டார் . அதோடு உடல் எடையும் அதிகரித்ததால் சிம்புவின் மார்க்கெட் அப்படியே இறங்கியது.

பின்னர் வெறித்தனமாக உடம்பை குறைத்து மாநாடு படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.  இதை அடுத்து இவருடைய நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு , பத்து தல போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . இதைத்தொடர்ந்து தற்போது,

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் சிம்பு . இந்த படத்திற்காக வெறித்தனமாக மாறி இருக்கிறார் நடிகர் சிம்பு. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *