April 30, 2024

விஜய்க்காக என்னோட இதயத்தையே கொடுப்பேன் ..!! ஓப்பனாக சொல்லிய பிரபலம் ..!! இது என்னடா புது கதையா இருக்கு ..?? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாருக்கு இணையான ரசிகர் பட்டாளம் நடிகர் விஜய்க்கும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இன்னும் சொல்ல போனால் தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல பிரபலங்கள் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர் . அந்த வகையில் பிரபலம் ஒருவர் விஜய்க்காக என்னுடைய இதயத்தையே கொடுப்பேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் .

அவர் வேறு யாருமில்லை இயக்குனர் மிஷ்கின் தான் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மிஷ்கின் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஞ்சாதே ,நந்தலாலா, யுத்தம் செய் ,முகமூடி ,

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , பிசாசு , துப்பரிவாளான் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் .அண்மைக்காலமாக நடிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் மிஷ்கின் . அந்த வகையில் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில்,

நடித்திருந்தார் இயக்குனர் மிஷ்கின் . இந்நிலையில் நேற்று நடந்த லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் விஜய்க்கு பற்றி புகழ்ந்து தள்ளினார்.  அது மட்டுமில்லாமல் விஜய்க்காக என்னுடைய நெஞ்சை கூட அறுத்துக் கொடுப்பேன் என்று கூறியிருந்தார் மிஷ்கின் .

மேலும் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் மிஷ்கின் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அப்போதிலிருந்து தான் விஜய்யும் இவரும் ஒரு நல்ல நண்பர்களாக இருந்து வருவதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *