April 18, 2024

ஏற்றிவிட்ட ஏணியையே மறந்த சூர்யா , கார்த்தி ..!! மேடையிலேயே புலம்பிய பிரபலம் ..!! ஊருக்கு மட்டும் தான் உபதேசமா ..??

தமிழ் திரை உலகில் ஒரு முக்கியமான நடிகர்களாக இருந்து வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி.  ஆனால் ஏற்றிவிட்ட ஏணியையே மறந்துள்ளனர் சூர்யா மற்றும் கார்த்தி.  அந்த வகையில் சூர்யாவுக்கு மிகப்பெரிய  திருப்புமுனையை ஏற்படுத்தியது பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படம் தான் . இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் இயக்குனர் அமீர் .  இதனால் ஒவ்வொரு காட்சியையும்,

சூர்யாவுக்கு அமீர் தான் சொல்லிக் கொடுப்பாராம் . அப்படி நந்தா படத்தின் மூலம் தொடங்கிய இவர்களுடைய நட்பு பின்னர் மௌனம் பேசியதே படத்தில் கூட்டணி அமைக்க வைத்தது. அப்படி  அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து சூர்யாவின் தம்பியான கார்த்தியை பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார் அமீர்.  இப்படி சூர்யா,  கார்த்தி இருவருக்குமே ஒரு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியவராக   இருக்கிறார் இயக்குனர் அமீர்.  ஆனால் சமீபத்தில்,

கார்த்தியின் ஜப்பான் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அமீருக்கு அழைப்பே கொடுக்கவில்லையாம்.  இதை இன்னொரு படத்தின் மேடையில் கூறியிருந்தார் அமீர் . அது மட்டுமல்லாமல் பருத்திவீரன் படத்தை அமீர் தான் தயாரித்திருந்தாராம்.  இதன்பிறகு அந்த படத்தை சூர்யாவின்,

உறவினரான தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிக் கொண்டாராம் . ஆனால் பேசியபடி இன்னும் பணத்தை கொடுக்க வில்லையாம் . இது குறித்து சூர்யாவும் , கார்த்தியும் இப்போது வரை வாய் திறக்கவில்லையாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *