May 6, 2024

புது கார் வாங்கி 2 மாசம் தான் ஆச்சு ..?? அதற்குள் விபத்தா ..?? ஜி பி முத்து வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம் ..!!

சமீப காலமாக யூடியூபர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும் . அப்படி யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் ஜி பி முத்து.  ஆரம்பத்தில் டிக் டாக் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான ஜி பி முத்து பின்னர் யூடியூபில் தொடர்ந்து வீடியோ போட்டு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.  அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராகவும் கலந்து கொண்டார் ஜி பி முத்து.

குறிப்பாக இவருடைய கள்ளம் கபடம் இல்லாத மனசு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு அமைந்தது . அந்த வகையில் தமிழில் வெளியான துணிவு , ஓ மை கோஸ்ட் , பம்பர் , வள்ளி மயில் ,

போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார் ஜி பி முத்து.  அந்தக் கார் வாங்கிய வீடியோவை கூட தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்,

ஜிபி முத்து.  இப்படி இருக்கும் நிலையில் நேற்று மதுரைக்கு செல்லும்போது கார் விபத்தில் சிக்கியிருக்கிறார் ஜி பி முத்து.  அந்த வகையில் காரில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வேகமாக வந்த கார் ஜி பி முத்துவின் காரை மோதி விட்டதாம் .

பின்னர் கார் ஓட்டி வந்த நபரும் தான் வேகமாக வந்ததை ஒப்புக்கொண்டதால் இருவரும் சமாதானம் பேசினார்களாம் . ஆனால் இடையில் பஞ்சாயத்து பேசுகிறேன் என்று ஒரு சிலர் இந்த பிரச்சனையை பெரிதாக்கி விட்டதாக கூறியிருந்தார் ஜி பி முத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *