April 29, 2024

இந்த படத்தில் நடிச்சிருக்கவே கூடாது ..!! இப்பவும் வருத்தப்படும் நயன்தாரா ..!! இது சூப்பர் ஹிட் படமாச்சே ..!!

தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா.  எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் மலையாள படத்தின் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கிய நயன்தாரா கடந்த 2௦௦5 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து  பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை நயன்தாரா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் .

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் இதுவரை 75 படங்கள் நடித்திருக்கும் நயன்தாராவுக்கு இந்த படத்தில் ஏன்டா நடித்தோன்னு இருந்ததாம்.  அந்த திரைப்படம் தான்,

கடந்த 2௦௦5 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கஜினி . இந்தப் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார் . ஆனால் இந்த படத்தின் கதையை வேறு மாதிரி கூறியிருந்தாராம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் . ஆனால் படத்தில் நடிக்கும் போது தான் நயன்தாராவுக்கு,

தெரிந்திருக்கிறது இதில் இரண்டாம் கதாநாயகி வேடம் என்று . இதன் பிறகு தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரங்கள் தான் அமைந்ததாம் . பின்னர் அதையெல்லாம் தவிர்த்து நடித்தால் கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார் நடிகை நயன்தாரா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *