April 28, 2024

கல்யாணமாகி 2 மாசம் தான் ஆச்சு ..!! அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் இடையே வந்த மோதல் ..!! யாருமே எதிர்பார்க்காத ஒன்று ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அசோக் செல்வன் . கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அசோக் செல்வன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன்,ஓ மை  கடவுளே ,சில நேரங்களில் சில மனிதர்கள் ,நித்தம் ஒரு வானம் ,போர் தொழில் போன்ற ,

பல நல்ல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் அசோக் செல்வன் . குறிப்பாக இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைக்களங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது . இதனிடையே ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் ,

நடிக்கும் போது சக நடிகையான கீர்த்தி பாண்டியன் மீது காதல் வயப்பட்டார் அசோக் செல்வன் . பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர் . இந்நிலையில் திருமணமாகி இரண்டு மாதங்களே  ஆன நிலையில் இருவருக்கும் இடையே ,

மோதல் வந்துள்ளது . அது என்னவென்றால் அசோக் செல்வன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் சபாநாயகன்.  இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது . அதே நாளில் தான் அசோக் செல்வனின் மனைவியான,

கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணகி திரைப்படமும் வெளியாக உள்ளதாம் . இப்படி கணவன் மற்றும் மனைவியின் திரைப்படம் ஒரே நாளில் மோதி கொள்வது இதுவே முதல் முறையாகும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *