April 27, 2024

46 வது பிறந்த நாளில் ..!! மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த உதயநிதி ..!! 21 வருடமாகியும் குறையாத காதல் ..!!

உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் , தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . ஆரம்பத்தில் தயாரிப்பாளராக கலக்கிக்கொண்டு வந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா ,கெத்து ,மனிதன் ,சரவணன் இருக்க பயமே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகர் உதயநிதி ஸ்டாலின் . குறிப்பாக கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை,

பெற்றுத் தந்தது . ஆனால் தற்போது அரசியலில் இறங்கி விட்டதால் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.  இதனிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் உதயநிதி ஸ்டாலின் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன்,

ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இன்று 46வது பிறந்த நாளை கொண்டாடும் உதயநிதி தன்னுடைய மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *