April 30, 2024

“அகில உலக சூப்பர் ஸ்டார் ” சிவனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் உள்ளே ..!!

சிவா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஜாக்கியியாக இருந்து வந்த சிவா தமிழில் வெளியான 12b ,ஆளவந்தான் , விசில் போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.  இதன் பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சிவா.

இப்படி வெளியான இவருடைய முதல் திரைப்படமே நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சரோஜா, தமிழ் படம் ,கலகலப்பு ,தில்லுமுல்லு ,வணக்கம் சென்னை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் சிவா . மேலும் தமிழ் ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் சிவா . ஆனால் அண்மைக்காலமாக இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  இதனிடையே ,

கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் சிவா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத சிவாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *