April 28, 2024

இத்தன நாளா எங்கமா போன..?? 6 வருடம் கழித்து வெளியில் தலை காட்டிய ஸ்ரீ திவ்யா..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலங்கிக் கொண்டு வந்த ஸ்ரீ திவ்யா கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ,

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் மயக்கிவிட்டார் நடிகை  ஸ்ரீதிவ்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள் ,மருது, காஷ்மோரா , மாவீரன் கிட்டு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை ஸ்ரீ திவ்யா .

இப்படி பல திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா ஒரு கட்டத்தில் நடிப்பதையே நிறுத்தினார் . இதன் பிறகு எங்கு உள்ளார் என்ன ஆனார் என்ற தகவலும் இல்லை . இப்படி இருக்கும் நிலையில்  கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ,

ரைடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஸ்ரீதிவ்யா . இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக ஆறு வருடங்கள் கழித்து தன்னுடைய முகத்தை வெளியில் காட்டியுள்ளார் ஸ்ரீ திவ்யா . அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கலக்கி கொண்டு வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் நம்ம ஸ்ரீ திவ்யாவா இது ..? எத்தனை நாள் ஆச்சு இவரை பார்த்து என்று கூறிவருகின்றனர் …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *