April 29, 2024

10 ம் வகுப்பு தேர்வு எழுதும் விஜய் பட நடிகர் ..!! 67 வயதில் விட்ட படிப்பை தொடரும் நடிகர் ..!! பாராட்டித்தள்ளும் ரசிகர்கள் ..!!

இந்திரன்ஸ் ஓர் பிரபலமான மலையாளத் திரைப்பட நடிகர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆவார் . கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய இந்திரன்ஸ் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் காமெடியனாகவும் , குணசித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார் . அப்படி இதுவரை 500 படங்களுக்கு மேல் நடித்து ,

சாதனை படைத்திருக்கிறார் நடிகர் இந்திரன்ஸ் . இப்படி மலையாள மொழி படங்களில் கலக்கிக் கொண்டு வந்த இந்திரன்ஸ் தமிழில் சேரன் நடிப்பில் வெளியான ஆடும் கூத்து மற்றும் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் ,

என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் தேசிய விருது உட்பட பல உயரிய விருதுகளை வென்றிருக்கும் இந்திரன்ஸ்  67 வயதில் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுத உள்ளாராம் . அதற்காக தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ,

தயாராகி வருகிறாராம் நடிகர் இந்திரன்ஸ் . மேலும் கல்வியின் அவசியம் குறித்து பேசிய இந்திரன்ஸ் , படிப்பறிவு இல்லாதது கண் பார்வை இல்லாததற்கு சமம் . நான் பாதியில் விட்ட படிப்பை இப்போது மீண்டும் பெற உள்ளேன் என்று கூறியிருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் ,

நடிகர் இந்திரன்ஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த தகவல் தற்போது சமூக  வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *