May 6, 2024

சூப் பர் ஹிட் டான மாம ன்ன ன் திரை ப்ப டம் ..!! மா ரி செ ல்வராஜு க்கு கா ர் வா ங்கி கொடு த்த உ தய நிதி ..!! விலை யை கேட் டு ஆடிப் போ ன ர சிகர்க ள் ..!!

மாரி செல்வராஜ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார் இயக்குனர் மாரி செல்வராஜ் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷை  வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் . இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது . இதை அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ்.  இந்த படத்தில்,

உதயநிதி ஸ்டாலின் இணைந்து வடிவேலு ,பகத் பாசி ல், கீர்த்தி சுரேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது . குறிப்பாக இது நடிகர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் ஆகும் . மேலும் 35 கோடி பட்ஜெட்டில் ,

உருவான இந்த திரைப்படம் இதுவரை 25 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது . அதுவும் உதயநிதி ஸ்டாலின் திரை வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் இவ்வளவு வசூல் செய்தது கிடையாது.  இதனால் தனக்கு பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜுக்கு காஸ்ட்லியான ,

மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் . அந்த காரின் விலை சுமார் 40 லிருந்து 45 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது . தற்போது அந்தப் புகைப்படத்துடன் கூடிய பதிவை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *