May 3, 2024

37 வருட இ சை வா ழ்க் கை ..!! தே வாவுக் கு கிடை க்காத அங் கீகாரம் ..!! தற் போது அவரு டைய மக னுக் கு கிடை த்துள் ளதா ..?? பாராட் டித்தள் ளும் ரசிகர் க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு தன்னுடைய இசையால் ரசிகர்களை மயக்கி வைத்தவர் தான் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் . கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வைகாசி பொறந்தாச்சு, மரிக்கொழுந்து ,அண்ணாமலை, செந்தூரப்பாண்டி ,பாட் ஷா ,ஆசை,

போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் தேவா . குறிப்பாக இவர் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி, கமல் ,விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இவர் ,

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்கள் என்று இதுவரை 400 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார் . அப்படி தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 37 வருடமாக இருந்து வரும் தேவாவுக்கு கிடைக்காத அங்கீகாரம் அவருடைய மகனான இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு,

கிடைத்துள்ளதாம் . அந்த வகையில் கருவறை என்ற குறும்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற இருக்கிறாராம்  இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்  தேவா . மேலும் தமிழ் சினிமா உலகில் 37 வருடங்கள் இருந்தும் தேவாவுக்கு  இதுவரை தேசிய விருதே கிடைக்கவில்லை . அப்படி பல வருடமாக அவருக்கு கிடைக்காத,

அங்கீகாரம் அவருடைய மகனுக்கு கிடைத்துள்ளதால் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீகாந்த் தேவா தமிழில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி ,குத்து , பழனி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *