May 10, 2024

சூர்யாவுக்கு சரியான போட்டி ஜோதிகா தான் ..!! 45 வயதிலும் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் நடிகை ..!! புகைப்படங்களை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள் ..!!

ஜோதிகா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஜோதிகா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி ,தெனாலி ,லிட்டில் ஜான், டும் டும் டும் ,பூவெல்லாம் உன் வாசம் ,தூள் ,பிரியமான தோழி, காக்க காக்க போன்ற ,

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ஜோதிகா . மேலும் ஜோதிகா சூர்யாவுடன் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி போன்ற பல படங்களில் நடித்திருந்தார் . அப்போது இருவருக்கும் இடையே ,

காதல் ஏற்பட்டு பின்னர் கடந்த 2௦௦6 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் . மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்திய ஜோதிகா பின்னர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி  கொடுத்திருந்தார் .

இப்படி இருக்கும் நிலையில் 45 வயதிலும் ஜோதிகா இளமையாக இருப்பதற்கு காரணம் அவர் செய்யும் உடற்பயிற்சி தானாம் . அந்த வகையில் இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் வெறித்தனமாக உடல் பயிற்சி செய்வாராம் ஜோதிகா.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *