April 29, 2024

ஹீரோ யின் போ ல மாறி ய “சில்லு னு ஒரு கா தல்” பட குழ ந்தை நட்சத் தி ரம் ..!! வெளிவ ந்த லேட் டஸ்ட் புகைப் படங் கள் ..!!

தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் என் கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல் . இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா ,பூமிகா ,சுகன்யா ,வடிவேலு ,சந்தானம், தம்பி ராமையா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக ,

அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு மகளாக நடித்திருந்தவர் தான் நடிகை ஷ்ரியா சர்மா . இந்த படத்தில் தன்னுடைய துரு துரு நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை ஷ்ரியா சர்மா . மேலும் ஆரம்பத்தில் இருந்தே,

குழந்தை நட்சத்திரமாக கலக்கிக் கொண்டு வந்த ஷ்ரியா சர்மா சில்லுனு ஒரு காதல் படத்தை தொடர்ந்து எந்திரன்,  நீதானே என் பொன்வசந்தம் போன்ற தமிழ் படங்களிலும் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் , தெலுங்கு ,கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்,

என்பது குறிப்பிடத்தக்கது.  பின்னர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்திய ஷ்ரியா சர்மா தற்போது வழக்கறிஞராக உள்ளாராம் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்ட்டிவாக  இருந்து வரும் ஷ்ரியா சர்மாவின்,

லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறுமியா இது .? ஹீரோயின் கணக்கா வளர்ந்து விட்டாரே என்று கூறி வருகின்றனர். இதோ அவரின் புகைப்படங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *