April 30, 2024

விஜய் சேதுபதியின் தயவு இல்லாமல் ஹீரோவான மகன் ..!! இந்த காலத்தில் இப்படியொரு மகனா ..?? விஜய் சேதுபதியின் வாரிசுக்கு குவியும் வாழ்த்துக்கள் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஹீரோ ,வில்லன்,குணசித்திர வேடம் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் கலக்கி கொண்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தனக்கென,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஜய் சேதுபதி . மேலும் விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும் இருக்கிறார் . இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான், சிந்துபாத் , விடுதலை போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நிலையில் ஸ்டுண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம் விஜய் சேதுபதியின் மகன்.  மேலும் அப்பாவின் தயவில்லாமல் தான் இந்த வாய்ப்பை பெற்றாராம் சூர்யா.  அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் ,

சூர்யா விஜய் சேதுபதி என்று குறிப்பிடாமல் வெறும் சூர்யா மட்டும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள் .மேலும் பல சினிமா பிரபலங்களின் வாரிசுகள் தங்களுடைய தந்தையின் அடையாளத்தில் வளர்ந்து வரும் நிலையில் விஜய் சேதுபதி என் மகன் இப்படி செய்துள்ளது,

பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகர்  விஜய் சேதுபதியின் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *