April 29, 2024

கை லாசா தா ன் பெண்க ளுக்கு மிகவு ம் பாதுகா ப்பா ன இட ம் ..!! பரப ரப் பை கிளப்பி ய நடி கை ரஞ் சி தா ..!! எ ன்ன என் ன சொ ல்றாங் க பாரு ங் க ..!!

9 0 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரஞ்சிதா.  கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நாடோடி தென்றல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரஞ்சிதா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை ,கருப்பு நிலா, மக்கள் ஆட்சி, பகைவன் போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருந்தார் நடிகை ரஞ்சிதா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,  கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வந்தார் . பின்னர் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரஞ்சிதா என்ன நினைத்தாரோ தெரியவில்லை ,

அவரை விவாகரத்து செய்துவிட்டு நித்தியானந்தா விடம் சரணடைந்தார் . அப்படி ஆரம்பத்தில் அவரால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ரஞ்சிதா தற்போது கைலாச நாட்டின் பிரதமராக இருந்து வருகிறாராம் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேசிய ரஞ்சிதா கைலாச பற்றி கூறியதாவது,

கைலாச தான் முதல் முதலாக உருவாக்கப்பட்ட இந்துக்கள் தேசம் . இங்கு எல்லாமே இலவசம் தான்.  அந்த விஷயத்தில் சுவாமி நித்யானந்தா உறுதியாக இருக்கிறார் . அது மட்டுமல்லாமல் விலங்குகளை கொலை செய்வதற்கு அனுமதியே கிடையாது.  அதனால் இங்கு அசைவங்களும் கிடையாது .

குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது கைலாசா .  அப்படி கைலாசவில் 98 சதவீதம் பெண்கள் தான் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்.  அதனால் இந்த இடம்தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று கூறியிருந்தார் நடிகை ரஞ்சிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *