May 6, 2024

தனுசுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ..!! அடுத்த படத்தில் இவர் தான் ஜோடியா ..?? பாலிவுட்டில் இருந்து பறந்து வரும் கவர்ச்சி நடிகை ..!!

தற்போது தமிழ் சினிமாவில் சத்தமே இல்லாமல் சம்பவம் செய்து வருகிறார் நடிகர் தனுஷ்.  அந்த வகையில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , ஹிந்தி மற்றும்  ஆங்கில மொழி படங்கள் என்று பட்டையை கிளப்பி வருகிறார் நடிகர் தனுஷ் . தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ் .

இதை முடித்த கையோடு தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கிய நடிக்க இருக்கிறார் நடிகர் தனுஷ்.  இதன் பிறகு இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் தனுஷ் .  ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வெளியான ராஞ்சனா மற்றும் ,

கலாட்டா கல்யாணம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து  மூன்றாவது முறையாக இருவரும் இணையுள்ளதால் ரசிகர்களிடையே  மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது . அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் பாலிவுட் நடிகை தனுசுக்கு ஜோடியாக ,

நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாருமில்லை நடிகை பிரபல ஹிந்தி பட நடிகையான கியாரா அத்வானி தான் . தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.  இதைத்தொடர்ந்து தனுசுடன்,

இணைய உள்ளாராம் நடிகை கியாரா அத்வானி . குறிப்பாக இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகி இருந்தது.  இப்படி தனுசுக்கு மட்டும் தொடர்ந்து அழகான கதாநாயகிகள் ஜோடியாகி வருவதால் தனுசுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *