April 25, 2024

9 வருடம் தவம் இருந்து பெற்ற மகனை ..!! முதல் முறையாக வெளியில் காட்டிய அட்லீ ..!! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே ..!!

தற்போது இந்திய அளவில் ஒரு பிரபலமான இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் அட்லீ . ஆரம்பத்தில் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.   இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை  பதித்த அட்லீ இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார் .

பின்னர் மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் , பிகில் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.  மேலும் இவர் இயக்கிய எல்லா படங்களும் வெற்றி பெற்றதால் இவருக்கு ஹிந்தியில் படம் இயக்க வாய்ப்பு வந்தது.  அந்த வகையில் கடந்த வருடம் ஷாருக்கான் நடிப்பில்,

வெளியான ஜவான் படத்தை இயக்கியிருந்தார் அட்லீ  . இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை கிருஷ்ணபிரியாவை காதலித்து திருமணம் ,

செய்து கொண்டார் இயக்குனர் அட்லீ  . திருமணமான இவர்களுக்கு 9 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது . இப்படி இருக்கும் நிலையில் கடந்த வருடம் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை  பிறந்தது.  இப்படி இருக்கும் நிலையில் ஆசை மகனின்,

முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார் இயக்குனர் அட்லீ . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *