April 28, 2024

மன்சூர் அலிகானுக்கு ஒரு நியாயம்..?? சூப்பர் ஸ்டாருக்கு ஒரு நியாயமா ..?? பழைய புராணத்தை கிளறிய ரசிகர்கள் ..!! வசமாக சிக்கிய சூப்பர் ஸ்டார் ..!!

தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது மன்சூர் அலிகான்- திரிஷா விவகாரம் தான் . அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் விளையாட்டாக பேசுவதாக நினைத்து திரிஷாவை பற்றி கொச்சையாக பேசி இருந்தார் மன்சூர் அலிகான். இது தற்போது காட்டுத்தீ போல பரவியுள்ளது.  குறிப்பாக தன் மீது எந்த தவறும் இல்லை அந்த வீடியோவை தவறாக கட் செய்து விட்டார்கள் என்று கூறியிருந்தார்,

நடிகர் மன்சூர் அலிகான் . அப்படி இருந்தும் கூட இந்த சர்ச்சை ஓய்ந்த பாடு இல்லை . ஆனால் இதேபோன்று ரஜினியும் செய்திருக்கிறாராம் . அந்த வகையில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார் தமன்னா . அந்த படத்தின் ஆடியோ லான்ச்சில் கிட்டத்தட்ட மன்சூர் அலிகான் ,

போலவே தமன்னாவை பற்றி பேசி இருந்தார் ரஜினி. ஆனால் அன்று யாருமே அதை கண்டு கொள்ளவில்லை.  தவறு செய்தது யாராக இருந்தால் என்ன.? ரஜினிக்கு ஒரு நியாயம் மன்சூர் அலிகானுக்கு ஒரு நியாயமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *