May 5, 2024

45 வது பிறந்த நாளை ..!! ஆதரவற்ற இல்லத்தில் கொண்டாடிய அருண் விஜய் ..!! குவியும் வாழ்த்துக்கள் ..!! வெளிவந்த புகைப்படங்கள் இதோ ..!!

அருண் விஜய் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.  மூத்த நடிகரான விஜயகுமாரின் மகனான அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பிரியம், கங்கா கௌரி, துள்ளித் திரிந்த காலம், அன்புடன் ,ஜனனம் ,போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவருக்கு  பெரியளவில் வரவேற்பு ,

கிடைக்கவில்லை . இதன் பிறகு பல வருடம் சினிமாவை விட்டு விலகி இருந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இந்த திரைப்படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ,

ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகர் அருண் விஜய் . இதன் பிறகு இவர் நடித்த குற்றம் 23 ,செக்க சிவந்த வானம் ,தடம் ,யானை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது வணங்கான் , பார்டர் என்று மூன்று படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார்,

நடிகர் அருண் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய 45 வது பிறந்த நாளை ஆதரவற்ற இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்  நடிகர் அருண் விஜய் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *