April 23, 2024

100 கோடியும் வேண்டாம் ..!! 200 கோடியும் வேண்டாம் ..!! எனக்கு இவ்வளவு சம்பளம் போதும் ..!! தயாரிப்பாளரிடம் அதிரடியாக சொல்லிய சூப்பர் ஸ்டார் ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இந்த படத்தில் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஜெய் பீம் பட இயக்குனரான டி ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 170 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ,

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் கிட்டத்தட்ட 38 வருடங்களுக்கு பிறகு ஹிந்தி நடிகரான அமிதாப்பச்சன் இணைய உள்ளாராம் . அதோடு இவர்களுடன் இணைந்து ராணா டகுபதி , பகத் பாஸில் ,மஞ்சு வாரியர்,

ரித்திகா சிங் , துஷாரா விஜயன் போன்ற பல தரமான நடிகர்,  நடிகைகளை தேர்வு செய்துள்ளார் இயக்குனர் டி ஜே ஞானவேல்.  இதனால் இந்த படத்திற்கு இப்போதே பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது . இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் பட்ஜெட்டே,

வெறும் 160 கோடி தானாம்.  குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்திய வெளியான படங்களிலேயே இந்த படம்தான் கம்மியான பட்ஜெட்டில் உருவாகுகிறதாம் . அது மட்டுமல்லாமல் இந்தப் படத்திற்காக 90 கோடி  சம்பளம் கொடுத்தால் போதும் என்று ,

கூறிவிட்டாராம் ரஜினிகாந்த் .  மேலும் நடிகர் விஜய் 200 கோடி சம்பளம் கேட்கும் நிலையில் ரஜினி 90 கோடி சம்பளம் மட்டுமே போதும் என்று சொன்னது ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *