April 26, 2024

பிக்பாஸ் வீட்டில் மாஸ் காட்டும் வி ஜே அர்ச்சனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே ..!!

அர்ச்சனா ரவிச்சந்திரன் ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் வி ஜேவாக பணியாற்றி வந்த அர்ச்சனா கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் . அப்படி இந்த சீரியலில் தன்னுடைய காமெடியான நடிப்பால் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் வி ஜே அர்ச்சனா.

பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து தேன்மொழி பி ஏ , இந்திரா போன்ற சீரியல்களிலும் , முரட்டு சிங்கள் சீசன் 2 ,காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்தார் அர்ச்சனா.  இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 7 என்ட்ரியாக உள்ளே,

நுழைந்துள்ளார் அர்ச்சனா. அப்படி ஆரம்பத்தில் அழு மூஞ்சியாக இருந்து வந்த அர்ச்சனா தற்போது சக போட்டியாளர்களை அலற வைத்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் . இன்னும் சொல்ல போனால் தற்போது இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளது.

இதனால் இவர் கூட டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்வார் என்றும் கூறப்படுகிறது . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத வி ஜே அர்ச்சனாவின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *