April 28, 2024

அதற்கு மட்டும் பாய் ப்ரெண்ட் வச்சுக்கோ..!! பெத்த மகளிடம் இப்படியா சொல்வது ..?? வனிதாவை கண்டபடி கழுவி ஊத்தும் ரசிகர்கள் ..!!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வனிதா விஜயகுமாரை தெரியாத ஆட்களே இருக்க மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் நடிகை வனிதா விஜயகுமார் . இன்னும் சொல்லப் போனால் இவர் படத்தில் நடித்து கூட இவ்வளவு பிரபலம் ஆகவில்லை . இந்நிலையில் நடிகை  வனிதாவை தொடர்ந்து அவருடைய மகளான ஜோவிகாவும் ,

பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டார் . ஆரம்பத்திலிருந்தே  தான் செய்வது மட்டும்தான் சரி என்று இருந்து வருகிறார் ஜோவிகா . இதுவே சகப் போட்டியாளருக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் . இன்னும் சொல்லப்போனால்,

வாய்ப்பேச்சில் வனிதாவையே மகள் ஜோவிகா மிஞ்சி விடுவார் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய மகள் குறித்து கூறியதாவது , நான் ஜோதிகாவிடம் பாய் ப்ரெண்ட் வச்சுக்கோ என்று பலமுறை,

சொல்லி இருக்கிறேன் . காரணம் ஜோவிகா தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் தான் சென்று வருகிறார் . ஆனால் அவளுக்கு பாய் ஃப்ரெண்ட் இருந்தால் பிக்கப் டிராப்புக்கு யூஸ் ஆகும் . இதனால் நானே பலமுறை ஜோவிகாவிடம் இது பற்றி கூறியிருக்கிறேன்.  ஆனால் ஜோவிகா,

தான் இதெல்லாம் வேண்டாம் என்று கூறியதாக அந்த பேட்டியில் சொல்லி இருந்தார் நடிகை வனிதா விஜயகுமார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் மகளிடம் இப்படியா சொல்வது என்று வனிதாவை கண்டபடி திட்டித்தீர்த்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *