April 29, 2024

ஆஸ்கர் வாங்கும் அளவிற்கு நடிக்கும் நடிகர் எம் எஸ் பாஸ்கரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே ..!!

தமிழ் திரையுலகில் ஒரு சில நடிகர்கள் மட்டும்தான் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிப்பார்கள் . அந்த ஒரு சில நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவராக இருப்பவர்தான் நடிகர் எம் எஸ் பாஸ்கர்.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த எம் எஸ் பாஸ்கர் ஒரு கட்டத்தில் காமெடி வேடங்களிலும் , குணச்சித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டு வந்தார் .

மேலும் ஆரம்பத்தில் எம்எஸ் பாஸ்கரை ஒரு காமெடி நடிகராக பயன்படுத்தி வந்த இயக்குனர்கள் தற்போது அவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்து வருகின்றனர் .  இன்னும் சொல்லப்போனால் ஆஸ்கர் வாங்கும் அளவிற்கு தன்னுடைய ஒவ்வொரு படத்திலும்,

சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் எம் எஸ் பாஸ்கர்.  மேலும் இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல டப்பிங் கலைஞர் என்று தான் சொல்ல வேண்டும் அ. ந்த வகையில் ஆங்கில படங்கள் உட்பட பல தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் எம் எஸ் பாஸ்கர்.

இதனிடையே ஷீலா என்பவரை திருமணம் செய்துக்கொண்ட  எம் எஸ் பாஸ்கருக்கு ஐஸ்வர்யா பாஸ்கர் என்ற மகளும் , ஆதித்யா பாஸ்கர் என்ற மகனும் உள்ளனர் . இதில் இருவர்களுமே தற்போது சினிமா துறையில் தான் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி இருக்கும் நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத எம்எஸ் பாஸ்கரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *